MARC காட்சி

Back
விளக்கொளிப் பெருமாள் கோயில்
245 : _ _ |a விளக்கொளிப் பெருமாள் கோயில் -
246 : _ _ |a விளக்கொளிப் பெருமாள், தீபப் பிரகாசர், திவ்யப் பிரகாசர்
520 : _ _ |a இக்கோயிலில் மூலவர் கருவறை விமானம் ஸ்ரீகர விமானம் என்றழைக்கப்படுகிறது. இது கரக்கோயில் வகையைச் சார்ந்தது ஆகும். இலட்சுமி, ஹயக்கிரீவர், ஆண்டாள், ஆழ்வார்கள், வேதாந்த தேசிகர், தீபப்பிரகாசர், கருடன் ஆகியோருக்கு தனித்தனி சிறுகோயில்கள் அமைந்துள்ளன. வைணவ ஆச்சாரியாரான வேதாந்த தேசிகன் என்பவரின் தாய் தனக்கு குழந்தை வேண்டி இத்தலத்துப் பெருமாளிடம் வேண்டினார். பெருமாள் தன் கையில் இருந்த மணியே குழந்தையாக பிறக்கும்படி அருள்பாலித்தார் என தலவரலாறு கூறுகிறது. 1268 ஆம் ஆண்டு தோன்றிய வேதாந்த தேசிகர் 1369 வரை ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார். பல நூல்களை வடமொழியில் இருந்து மொழிபெயர்த்தார். மேலும் வரதராஜப் பெருமாள் மீது அடைக்கலப்பத்து என்ற பாமாலையைப் பாடியுள்ளார். இவரது புதல்வன் நயின வரதச்சாரியார் விளக்கொளிப் பெருமாள் கோயிலுக்கு திருப்பணி செய்தார். வேதாந்த தேசிகர் வழிபட்ட இலட்சுமி ஹயக்கிரீவர் திருமேனி இன்றும் கோயிலில் உள்ளது. சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் இவருக்கு அவதார விழா கொண்டாடப்படுகிறது. இத்தலம் பண்டு தர்ப்பைப் புல் மிகுந்த பகுதியாக இருந்ததால் தூப்புல் என வழங்கப்படுகிறது. திருத்தண்கா எனவும் மங்களாசாசனத்தில் குறிப்பிடப்படுகிறது. திருமங்கையாழ்வார் இரண்டு பாசுரங்களில் இத்தலத்தைக் குறிப்பிட்டுள்ளார். குழந்தை வரம் வேண்டியும், கல்விக்கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தலத்து இறைவனை வேண்டிக் கொள்கின்றனர்.
653 : _ _ |a விளக்கொளி பெருமாள் கோயில், விளக்கொளி பெருமாள், திருத்தண்கா, தூப்புல், 108 திவ்ய தேசங்கள், 108 திவ்ய தேசங்களில் 46-வது தலம், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், வேதாந்த தேசிகர், மரகதவல்லி, சரஸ்வதி தீர்த்தம்
710 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
902 : _ _ |a 9894443108
905 : _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு
909 : _ _ |a 2
910 : _ _ |a 1100 ஆண்டுகள் பழமையானது. மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலம். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 46-வது திருத்தலமாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலம் இது. திருத்தண்கா, தூப்புல் என்று இத்தலம் பாடலில் குறிப்பிடப்படுகிறது.
914 : _ _ |a 12.8278661
915 : _ _ |a 79.7231612
916 : _ _ |a விளக்கொளிப் பெருமாள்
918 : _ _ |a மரகதவல்லி நாச்சியார்
923 : _ _ |a சரஸ்வதி தீர்த்தம்
926 : _ _ |a வைகாசி மாதம் காஞ்சி வரதராஜப்பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளி வேதாந்த தேசிகனுக்கு காட்சி கொடுக்கும் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் விளக்கொளி பெருமாள் வேதாந்தர் திருமுன் செல்வதும், மார்கழி மற்றும் சித்திரைப் பௌர்ணமிகளில் வரதராஜப் பெருமாள் எழுந்தருளி தேசிகனுக்கு மரியாதை செய்வதும் விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.
928 : _ _ |a வேதாந்த தேசிகன் மற்றும் விளக்கொளிப் பெருமாளின் தற்கால ஒவியங்கள் உள்ளன.
929 : _ _ |a இலட்சுமி, ஹயக்கிரீவர், ஆண்டாள், ஆழ்வார்கள், வேதாந்த தேசிகர், தீபப்பிரகாசர், கருடன் ஆகியோருக்கு தனித்தனி சிறுகோயில்கள் அமைந்துள்ளன. கருவறையில் நின்ற நிலையில் விளக்கொளிப் பெருமாள் உள்ளார். திருவீதியுலா செப்புத் திருமேனியும் உள்ளது. வேதாந்த தேசிகருக்கு தனி சிறுகோயிலில் அவரது திருவுருவம் அமைந்துள்ளது.
930 : _ _ |a படைப்புக் கடவுள் நான்முகன் பூவுலகில் தனக்கு கோயில் எதுவும் இல்லை என சிவனிடம் வேண்டி பெரிய யாகம் ஒன்றை நடத்தினார். அந்த வேள்விக்கு அவர் தன் மனைவி சரஸ்வதி தேவியை அழைக்கவில்லை. அதனால் கோபங்கொண்ட சரஸ்வதி தேவி நான்முகன் நடத்தும் வேள்வி ஒளியில்லாமல் இருண்டு போக சாபமிட்டாள். இதனால் நான்முகன் திருமாலிடம் முறையிட, திருமால் இத்தலத்தில் விளக்கொளிப் பெருமாளாக நின்றார். மேலும் சரஸ்வதி தேவிக்கும் காட்சியளித்தார்.
932 : _ _ |a இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் விமானம் ஸ்ரீகர விமானம் எனப்படுகிறது. வேதாந்த தேசிகரின் புதல்வன் நயின வரதாச்சாரியாரால் இக்கோயில் முழுவதும் கி.பி.14-ஆம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் வேதாந்த தேசிகர், இலட்சுமி ஹயக்கிரீவர், ஆண்டாள், கருடன் ஆகியோருக்கு தனி சிறுகோயில்கள் அமைந்துள்ளன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a காமாட்சியம்மன் திருக்கோயில், ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், கைலாசநாதர் கோயில், ஜுரஹரேஸ்வரர் கோயில்
935 : _ _ |a சென்னையிலிருந் 75 கி.மீ. தொலைவில் உள்ள காஞ்சிபுரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 7.00-9.00 முதல் மாலை 5.00-7.00 வரை
937 : _ _ |a காஞ்சிபுரம்
938 : _ _ |a செங்கல்பட்டு
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a காஞ்சிபுரம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000068
barcode : TVA_TEM_000068
book category : வைணவம்
cover images TVA_TEM_000068/TVA_TEM_000068_விளக்கொளிப்-பெருமாள்-கோயில்_கொடிமரம்-0005.jpg :
Primary File :

TVA_TEM_000068/TVA_TEM_000068_விளக்கொளிப்-பெருமாள்-கோயில்_கோபுரம்-0001.jpg

TVA_TEM_000068/TVA_TEM_000068_விளக்கொளிப்-பெருமாள்-கோயில்_மூலவர்-0002.jpg

TVA_TEM_000068/TVA_TEM_000068_விளக்கொளிப்-பெருமாள்-கோயில்_வேததேசிகர்-திருமுன்-0003.jpg

TVA_TEM_000068/TVA_TEM_000068_விளக்கொளிப்-பெருமாள்-கோயில்_கருடாழ்வார்-திருமுன்-0004.jpg

TVA_TEM_000068/TVA_TEM_000068_விளக்கொளிப்-பெருமாள்-கோயில்_கொடிமரம்-0005.jpg

TVA_TEM_000068/TVA_TEM_000068_விளக்கொளிப்-பெருமாள்-கோயில்_வேதாந்த-தேசிகர்-0006.jpg